திமுத் கருணாரட்னவுக்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம்

Report Print Ajith Ajith in அறிக்கை

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.

கடந்த வாரம் திமுத் கருணாரட்ன, முச்சக்கரவண்டியொன்றுடன் தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்திருந்தார்.

இதனையடுத்து திமுத் கருணாரட்னவின் சாரதி அனுமதி பத்திரத்தை நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது. இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள நட்ட ஈட்டை செலுத்துவதாக திமுத் கருணாரட்ன உறுதியளித்துள்ளார்.

இதேவேளை பல்லேகல மைதானத்தில் நாளை முதல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சுப்பர் ப்ரோவின்சியல் சுற்றுப்போட்டியில் சிறப்பாக விளையாடுபவர்களை கொண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ணப்போட்டிகளுக்கான அணி தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.