கரன்னாகொடவிடம் நடத்திய விசாரணை நிறைவு: குற்றப் புலனாய்வு திணைக்களம்

Report Print Steephen Steephen in அறிக்கை

மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெற்று நிறைவு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது கரன்னாகொடவின் வாக்குமூலத்தில் உள்ள உண்மை மற்றும் பொய்கள் சம்பந்தமாக விசாரணை நடத்தி பின் அதனை நீதிமன்றத்திற்கு அறிய தருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சியை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட நான்கு முறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.