நடிகை மீது கொடூர தாக்குதல்! மிகுந்த கவலையில் தென்னிலங்கை அமைச்சர்

Report Print Vethu Vethu in அறிக்கை

நடிகை பியுமி ஹன்சமாலியை சிலர் தாக்கியமை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பேஸ்புக் ஊடாக பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

இது போலி நடிப்பா என்று எனக்கு தெரியவில்லை. எனினும் தினமும் எங்கள் நாட்டில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

பியுமி ஹன்சமாலி என்ற பெண்ணை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ தொடர்பில் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பெண் பிள்ளைக்கு தந்தை என்ற ரீதியில் நான் இந்த வீடியோ குறித்து கண்டனம் வெளியிடுகின்றேன்.

இந்த பிரபலமாகுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடிப்பா என்று எனக்கு தெரியாது.

எப்படியிருப்பினும் இவ்வாறான பிரச்சினைக்கு பெண்களாக நீங்களும் முகம் கொடுக்கின்றீர்கள் என்றால் அதனை அறிவிப்பதற்கு இந்த இணையத்தை தொடர்பு கொண்டு அறிவிக்கவும்

https://www.winsl.net/contact/” என அவர் குறிப்பிட்டுள்ளார்.