கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் இரண்டாம் கட்ட பணிகள்

Report Print Yathu in அறிக்கை

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக 127 மில்லியன் ரூபா நிதியில் தொழிநுட்ப மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக கேள்விப்பத்திரம் கோரப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய கட்டுமான பணிகள் மீள்குடியமர்வின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் சமுர்த்தி திணைக்களம் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என ஐம்பது வீதமான பிரிவுகள் பழைய மாவட்ட செயலக வளாகத்திலேயே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் மாவட்ட செயலகத்தின் இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான தொழிநுட்ப மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு இருந்த போதும், மாவட்ட செயலகத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக 127 மில்லியன் ரூபா நிதியில் தொழிநுட்ப மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக கேள்விப்பத்திரம் கோரப்படவுள்ளதாக மாவட்ட செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.