இலங்கையில் ஏற்படவுள்ள அதிசயம்! படையெடுக்கவுள்ள உலக நாட்டுத் தலைவர்கள்

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு ஆசியாவின் மிக உயரமான கட்டடம் எதிர்வரும் மே மாதம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் நிர்மாணிப்பு பணிகள் முழுமை அடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல அம்சம் இந்த தாமரை கோபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள், அருங்காட்சியங்கள் போன்றவைகள் கீழ் மாடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இந்த செயற்றிட்டத்துடன் தொடர்புடைய பிரதான அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக 4 மாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மேல் பகுதியில் சுற்றும் உணவகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 300 பேர் வரையில் அமர முடிவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 7 அறைகள் கொண்ட மிகப்பெரிய பகுதி ஒன்று மேல் பகுதியில் உள்ளதாகவும் அங்கு உலக நாடுகளில் அரச தலைவர்கள் தங்க முடிவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கட்டடம் அடுத்த மாதம் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கபடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் இதுவொரு அதிசயம் எனவும் பல நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் சொர்க்காபுரியாக திகழும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.