இந்தோனேஷியாவில் நேற்று நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

Report Print Sujitha Sri in அறிக்கை

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் நேற்று மாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் பதிவாகியதன் பின்னர் இந்தோனேஷியாவின் மொரோவலி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரையில் இருந்து 17 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை ஐந்து மணியளவில் நிக்கோபார் தீவு பகுதியிலும் 4.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

எனினும் அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதேனும் விடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை என குறிப்பிடத்தக்கது.


Latest Offers