ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா? இலங்கையில் பிரமிக்க வைக்கும் சாதனை

Report Print Vethu Vethu in அறிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றமையினால் நேற்றைய தினம் மாத்திரம் அரசாங்கத்திற்கு பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு 100 மில்லியன் ரூபா என்ற சாதனை வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டமையினால் அதிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது.

ஏனைய வருடங்களை விடவும் அதிக பேருந்து பயணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு சென்ற பயணிகளின் எண்ணிக்கையிலேயே பாரிய அதிகரிப்பு ஏற்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் 100 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தினசரி வருமானத்தில் இது தான் அதிகூடிய வருமானமாக கருதப்படுகின்றது.