இலங்கை தமது பொருளாதார மீளமைப்பை தொடர வேண்டும்! சர்வதேச நாணய நிதியம்

Report Print Ajith Ajith in அறிக்கை

தேர்தல்களை எதிர்நோக்குகின்ற போதும் இலங்கை தமது பொருளாதார மீளமைப்பை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள உதவி பணிப்பாளர் எனீ மேரிகைட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதன்போது ஒதுக்கங்களை மேற்கொள்ளும் வகையில் நிதி கொள்கையை அரசாங்கம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

கடந்த சில மாதங்களாக சந்தைத்துறையில் ஏற்பட்டுள்ள ஸ்திரதன்மை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும்.

அதிக கடன்படுகையின் மத்தியில் கட்டமைப்பு ரீதியான மீளமைப்புக்கள்முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் வேலைவாய்ப்பின்மை வீதம் குறைந்த மட்டத்தில் உள்ள நிலையில் பெண்களின் பங்களிப்புகளும் குறைவாகவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers