விகாரி வருட பிறப்பை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள யாழ். மாநகர முதல்வர்

Report Print Sujitha Sri in அறிக்கை

விகாரியை தொடர்ந்து வரும் காலம் மக்கள் மனதில் மகிழ்வுடையதாக அமையட்டும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

இன்று மலரும் விகாரி வருடம் எம் மத்தியில் உள்ள வேற்றுமைகளை நீக்கி, ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

கடந்த காலங்களில் நடந்தேறிய துன்பங்களையும், துயரங்களையும் மறந்திடுவோம்.

விகாரியை தொடர்ந்து வரும் காலம் மக்கள் மனதில் மகிழ்வுடையதாக அமையட்டும் என வாழ்த்தி எனது புதுவருட வாழ்த்தினைத் தெரியப்படுத்துகின்றேன்.

சித்திரை புத்தாண்டு இலங்கையில் வாழும் ஈரின மக்களாகிய தமிழர்களில் இந்துக்களுக்கும், சிங்களவர்களுள் புத்தமதத்தை சார்ந்தவர்களுக்கும் பொது பண்டிகையாக உள்ளது.

எனவே இது ஒரு தேசிய திருநாளாகும். எனவே நாடெங்கும் அமைதி நிலவ வேண்டுமென இந்த புனித நாளில் இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers