விகாரி சித்திரை புது வருடத்தை உரமான நம்பிக்கையோடு உயிர்ப்பு மிக்கதாக்குவோம்

Report Print Vamathevan in அறிக்கை

பிறந்திருக்கும் “விகாரி” சித்திரை புது வருடத்தை உரமான நம்பிக்கையோடு உயிர்ப்பு மிக்கதாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

விகாரி புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில்,

சிறந்ததும், மனப்பூர்வமானதுமான மாற்றங்களை ஆக்கபூர்வமாக ஏற்படுத்தி பிறந்திருக்கும் சித்திரை புது வருடத்தில், நாமும் நமது சிந்தனைகளில், எண்ணங்களில், செயற்பாடுகளில் புதியவற்றினை புத்துருவாக்கம் பெற செய்ய வேண்டும்.

இவ் தலைமுறையினர் யதார்த்தமான சிந்தனைகளை ஏற்படுத்துபவர்களாகவும், அவற்றிற்கு முதலிடம் வழங்குபவர்களாகவும் உள்ளனர். நாம் எமது பாரம்பரியமிக்க கலை, கலாச்சார, பண்பாடுகளின் ஊடாகவும் அவற்றினை மிளிர செய்து, நிகழ்காலத்திலும் பாரம்பரியங்களினூடாகவும் புதியனவற்றை பரிணமிக்க செய்ய வேண்டும்.

பிறந்திருக்கும் விகாரி புதுவருடம் அனைவருக்கும் சுபீட்சம் மிக்கதாக அமைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நமது முன்னோர்களின் வழிகாட்டலில் நீண்டகாலமாக எம்மால் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியங்களும், முன்னோர்களின் ஆசீர்வாதமும் அனைவருக்கும் புத்தெழுச்சியை வழங்க தொடர்ந்தும் நாம் புதிதாக பிறக்கும் வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இயற்கையின் இருப்பிடத்தில் நாம் புதிதாய் தோற்றம் பெற்று, எமக்கு தேவையானவற்றை ஏற்படுத்துவதும், அதனை நோக்கி பயணிப்பதுமாக எமது வாழ்வு பயணிக்கின்றது. தோற்றுவிப்பதும், புதுப்பிப்பதும் நமது கடின முயற்சிகளின் பலாபலன்களே.

பிறக்கும் வருடத்தை நம்பிக்கையோடும் பல்வேறு எதிர்பார்புக்களோடும் நோக்குகின்றோம். தோற்றம் பெறும் ஒவ்வொரு விடயங்களும் தாக்கங்களுக்கான மறுதாக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே நமக்கு ஒவ்வாத விடயங்களை புதிய நாட்களில், புதிய நம் பயணங்களில் புறம் அகற்றி விலக்கி கொள்வது வரவேற்கப்பட வேண்டியது.

தொன்மைகளை தொடரும் நாம் அவற்றை அடையாளமிக்க ஒன்றிணைந்த பலமான பன்மைத்துவத்திற்கு மூலதனமாக்குவோம்.

புதுமைகள் புத்தெழுச்சி பெறட்டும். மாற்றங்கள் மலரட்டும் சிறந்த அறுவடைகளை பெற்று கொண்டாடும் இவ் புதிய வருடம் நமது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் ஆண்டாக அமைவதற்கு, நாம் நமது முயற்சிகளை சாதகமாக்கி உயிர்ப்புமிக்கதாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers