புத்தாண்டு காலப்பகுதியில் நேர்ந்துள்ள அசம்பாவிதங்கள்

Report Print Kamel Kamel in அறிக்கை

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு புத்தாண்டு காலப்பகுதியில் விபத்து சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 48 மணித்தியாலங்களில் திடீர் விபத்துக்கள் காரணமாக 413 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் திடீர் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

வீதி விபத்துக்கள் காரணமாக 113 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விடவும் 6 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 49 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 22 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்முறைகளினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்துக்களினால் இம்முறை ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு ஒரு மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.