உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கம் நிதியுதவி

Report Print Mohan Mohan in அறிக்கை

காலநிலைக்கு ஏற்ற விவசாய செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கம் நிதியுதவியாக வழங்கியுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை, அநுராதபுரம், குருணாகல், மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் 11 உலர் வலயங்களின் சுமார் 62,000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைய முடியுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் காலநிலை மாற்றத்தால் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.