இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழில்

Report Print Navoj in அறிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் யாழில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக தற்போதைய மத்திய செயற்குழுவின் இறுதி கூட்டம் 2019.04.26ஆம் திகதி பி.ப 04.30 மணிக்கு இல 30, மார்ட்டீன் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை காரியாலத்தில் நடைபெறும்.

அத்துடன், கட்சியின் புதிய பதவி வழி உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்யும் பொதுக்குழுக் கூட்டம் 2019.04.27ஆம் திகதி காலை 09.30 மணிக்கு கீரிமலை சிவபூமி மண்டபத்தில் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் செயலாளர் அடங்கிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அதன் பின்னர் மாதர் முன்னணி மாநாடு 2019.04.27ம் திகதி பி.ப 03.00 மணிக்கு கீரிமலை சிவபூமி மண்டபத்தில் நடைபெறும்.

இதன் பின் வாலிபர் முன்னணியின் மாநாடு 2019.04.27ம் திகதி பி.ப 05.00 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெறும். இதேவேளை அடுத்த தினம் 2019.04.28ம் திகதி காலை 09.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெறும்.

இதில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கிளைகளினதும் உறுப்பினர்கள் பங்குபற்றுவர். இறுதியாக கட்சியின் பகிரங்க பொதுக் கூட்டம் 2019.04.28ம் திகதி பி.ப 03.30 மணிக்கு நல்லூரில் சங்கிலியன் தோப்பு மைதானத்தில் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers