இம்மாதம் இறுதி வரையே யாழ். மாநகரசபை மக்களுக்கு அவகாசம்

Report Print Sujitha Sri in அறிக்கை

யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வளர்ப்பதுடன், வீடுகளில் கட்டி வைத்து வளர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

இந்த வளர்ப்புத் திட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்வரும் 2019.04.30ஆம் திகதி வரை மாநகரசபை மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

இம்மாதம் 30ஆம் திகதியின் பின் வீதிகளில் நடமாடி திரியும் கட்டாக்காலி நாய்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி யாழ். மாநகரசபையினால் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகின்றேன்.

எனவே மேற்குறித்த தீர்மானத்தை தங்களின் முழுமையான கவனத்திற்கு எடுத்து மாநகரசபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர மக்களை கேட்டு கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers