ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது மூவர் அடங்கிய விசேட விசாரணை குழு

Report Print Sujitha Sri in அறிக்கை

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட விசாரணை குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோர் அடங்கிய குழுவே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குழு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கான காரணங்கள், சம்பவத்தின் பிண்ணனியில் இருக்கும் விடயங்கள் என்பன உள்ளடக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers