ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பணிப்புரை

Report Print Sujitha Sri in அறிக்கை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் நிரந்தர வதிவிடங்களில் வசி​ப்போரை பதிவு செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களை காண நேரிட்டால் உடனடியாக பொலிஸாருக்கோ அல்லது பாதுகாப்பு தரப்பினருக்கோ தகவல் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.