ஞாயிறு ஆராதனைகளை நிறுத்துமாறு இலங்கை முழுவதும் உள்ள தேவாலயங்களுக்கு அறிவுறுத்தல்

Report Print Givitharan Givitharan in அறிக்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தேவாலயங்கள் உட்பட எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னர் அசாதாரண நிலை தொடர்ந்தவாறே உள்ளது.

இவ்வாறிருக்கையில் ஆங்காங்கே ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றல் மற்றும் கைதுகள் என்பன இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை முழுவதிலும் தேவாலயங்களில் உள்ள ஆராதனைகளை நிறுத்துமாறு கிறிஸ்தவ பாதிரியார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.