இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலும், அவசரநிலை பிரகடனமும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,
இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 200 குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர்.
சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளன. குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சுமார் 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலும், அவசரநிலை பிரகடனமும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்தவர்களுக்கு உளவியல் முதலுதவி தேவைப்படுவதாகவும் செஞ்சிலுவை சங்கம் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது.