25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் தொடர்பான மனு! உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Sujitha Sri in அறிக்கை
1432Shares

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை விடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் மற்றும் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினர் இணைந்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இவர்களை விடுவிப்பதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு வழங்கப்பட்ட நிலையிலும் இது குறித்து எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையே இருந்து வருகிறது.