கொழும்பிற்குள் குண்டு பொருத்திய வாகனம்! விமானப்படை வீரரின் தகவலால் களத்திலிறங்கிய பொலிஸார்

Report Print Steephen Steephen in அறிக்கை
2998Shares

கொழும்பு நகருக்குள் குண்டு பொருத்தப்பட்ட கார் ஒன்று வந்துள்ளதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

வாகனத்தை வாடகைக்கு பெற்று கொண்ட நபர் இரண்டு மாதங்களாக சந்தேகநபரான விமானப்படை வீரருக்கு தவணை பணத்தை செலுத்தவில்லை என்பதால் இந்த பொய்யான தகவலை சந்தேகநபர், பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

விமானப்படை வீரர் வழங்கிய இந்த தகவலுக்கு அமைய நாடு முழுவதும் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் புறக்கோட்டை வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

காருடன் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணைகளில், கார் விமானப்படை வீரரிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்டது எனவும் தவணை பணத்தை செலுத்த தவறியதால், அவர் தன்னுடன் கோபத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கு அமைய விமானப்படை வீரரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்திய நிலையில், தான் வழங்கியது பொய்யான தகவல் என்பதை சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.