பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவித்தல்

Report Print Satha in அறிக்கை

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இவ்வாறு வெடிபொருட்களை கால அவகாசம் 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.