பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள்

Report Print Ajith Ajith in அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் இன்று கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் நடைபெற்றுள்ளன.

முழுமையான பாதுகாப்பின் மத்தியில் இந்த ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இன்னும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இது சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.