தாக்குதல் தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

Report Print Ajith Ajith in அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை ஆராய்வதே இந்த குழுவின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்த நிலையில் கோரிக்கைக்கு அமைய 12 பேர் கொண்ட குழுவை சபாநாயகர் அமைக்கவுள்ளார்.

இந்த குழு நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று சாட்சியங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்யும் உரிமையை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...