ஈழப் போரில் நடந்தது என்ன? இலங்கை அரசின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் முக்கிய சாட்சியங்கள்

Report Print Dias Dias in அறிக்கை

இறுதிக்கட்ட போரின் போது படுகாயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டி.வரதராஜா மற்றும் அரசாங்க மருந்தாளரான கந்தசாமி ஆகியோர் ஊடகவியளார்களை சந்தித்து பல தகவல்களை வெளியிடவுள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பானது ஒட்டோவாவில் நடைபெற உள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது நேரில் பார்த்த முக்கிய சாட்சியங்களான இவர்கள் இரண்டு பேரும் இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் குறித்து பேசவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், குறைந்தபட்சம் சுமார் 70,000 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டிருந்தது.

இலங்கை அரசு தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய இந்த தாக்குதல் சம்பவமே மானிட வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை என கருதப்படுகிறது.

இதற்கு நீதி வேண்டி உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இறுதிக்கட்ட போரின் போது, படுகாயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டி.வரதராஜா மற்றும் அரசாங்க மருந்தாளரான கந்தசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.