ஊரடங்கு சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Report Print Rakesh in அறிக்கை

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம் வீடுகள், வியாபார ஸ்தலங்கள், பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்ற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

ஊரடங்கு சட்ட நேரத்திலும் பாதுகாப்பு படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது.

வன்முறையாளருக்கெதிராக உடனடியானதும், கடுமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்திலுள்ளோர் எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

அரசாங்கம் தம்மை பாதுகாக்க தவறுகிறது என்று மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மை தாமே பாதுகாக்க தலைப்படுவார்கள்.

இப்படியான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் என்று நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நாட்டில் தான் சுயமாக வாழ்வதற்கு போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் நினைக்கத் தூண்டாதீர்கள்.

கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி, பள்ளிவாசல்களை தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் சரி எவ்விதமான பயங்கரவாதத்திற்கும் இந்த நாட்டிலே இடமிருக்கக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.