ஒற்றுமையுடன் செயற்பட்டு நாட்டினை முன்னேற்றிடுவோம்!

Report Print Murali Murali in அறிக்கை

அமைதியுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு எமது நாட்டினை உயர்த்திட வேண்டிய இக்கால கட்டத்தில் மனிதத்திற்கு மதிப்புக்கொடுக்காமல் எமது நாட்டில் நடைபெற்றுவருகின்ற செயற்பாடுகள் மனதிற்கு மிகுந்த வேதனையை தருகின்றது.

இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீகு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“சமயம் என்பது பக்குவப்படல். வாழ்வியலை போதிப்பது சமயம். அனைத்து சமயங்களும் அன்பினையும் மனித வாழ்வியலையும் போதிக்கின்றது.

இவ்வாறான சமயங்களை போற்றும் நாம் மனித எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் குரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவது தவறாகும்.

அதுபோல நாம் தொடர்ந்து வரும் காலங்களில் நல்ல சிந்தனை உள்ளவர்களாக அன்புடன் வாழ்ந்திட இறைவன் அருள்புரிய வேண்டும்.

மேலும், கடந்த வாரத்தில் நாட்டில் நடைபெற்ற விரும்பத்தகாத செயற்பாட்டாளர்களுக்கு உரிய தண்டனைகள் விரைந்து வழங்கப்பட அரசு உத்தரவாதத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நாம் கோரிக்கை விடுகின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers