முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தலுக்கு சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Report Print Nivetha in அறிக்கை

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சர்வதேச சமூகத்தின் கவனம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இருந்து திசை திரும்பியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையிலும், எமது உரிமைகள் குறித்தும் எமக்கு கிடைக்கவேண்டிய நீதி குறித்தும் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டவேண்டிய அவசியம் இன்று எமக்கு இருகின்றது.

கடந்த காலங்களைப் போல மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரிமைகள் மற்றும் நீதி ஆகியவை குறித்து தமது உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது.

இதேவேளை, அன்றைய தினம் நானும் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவு கூரல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கின்றோம் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.