இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புசபை கோரியுள்ளது.

மன்னிப்புச்சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்த பொறுப்புக்கூறலை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் போர் முடிவடைந்து 10வருடங்களாகிய நிலையில் இன்று இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி 2019இல் இடம்பெற்ற தாக்குதல்களில் 250 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சிறுபான்மையினர் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிலையான நீதிக்கான அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ளவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உறுதியளித்து 4 வருடங்கள் கடந்துவிட்டன.

எனினும் அந்த விடயங்களில் சிறிய முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய முன்னேற்றத்தை காணாமையே, இன்று இனங்களுக்கு இடையிலான முறுகல்களும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெற காரணமாகும்.

நல்லிணக்கம் தொடர்பான விடயத்தில் இலங்கை அரசாங்கம் உண்மையான அர்ப்பணிப்பை காட்டும்போதே சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் எழாமல் இருக்கும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010இல் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம், 1980ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 100,000பேர் வரை காணாமல் போனமை, 2006ஆம் திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை.

2006ஆம் ஆண்டு மூதூரில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டமை,2012இல் வெலிக்கடை சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்டமை,

2006இல் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொல்லப்பட்டமை,2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்கள், அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் நீதியை நிலைநாட்டாத சம்பவங்களாக பதிவாகியுள்ளன.

பிடித்து வைத்த காணிகளை விடுவித்துள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி கூறுகிறார்.எனினும் இன்னும் படையினரும் அவர்களுடைய முகவர்களும் வடக்குகிழக்கில் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் அமைத்துள்ள அலுவலகம் வரவேற்கத்தக்கது.

எனினும் அதன் செயற்பாடுகள் மந்தகதியில் உள்ளன. இந்தநிலையில் ஐக்கிய நாடுகளில் அளித்த உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்படாமல் உள்ளமையால், இன்னும் பல தமிழ் இளைஞர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புக்களை அரசாங்கம் அவ்வப்போது நிறுவியது.

எனினும் அவற்றினால் எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை. எனவே சர்வதேச சமூகத்தினர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோர் மனித உரிமை மீறல் மற்றும் குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதிசெய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியப்பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.