பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்! ஐ.நா கடும் கண்டனம்

Report Print Murali Murali in அறிக்கை

பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள்சபையின் செயற்குழு இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது.

நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்டு மாத்திரம் பிரித்தானியா 43 இலங்கை அகதிகளை பலவந்தமாக நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கை, கண்டனத்துக்குரியதும் ஆபத்தானதுமான செயற்பாடு என்று துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.