இலங்கையில் கட்டாயப்படுத்தப்படவுள்ள விடயம்! விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது சட்டம்

Report Print Sujitha Sri in அறிக்கை

ஆபரணங்களை விற்பனை செய்கின்ற போது தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் தர சான்றிதழ் முத்திரை பெற்று கொள்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இது தொடர்பான சட்டதிட்டங்களை இலங்கையில் முறையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையில் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தரச் சான்றிதழ் இல்லாத ஆபரண விற்பனையானது சந்தையில் பரவலாக இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாகவே ஆபரணங்களை விற்பனை செய்யும் போது தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபையின் தரச்சான்றிதழ் முத்திரையை பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இது தொடர்பான சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.