ஜூன் 3ஆம் திகதி அரச மொழித் தினம்

Report Print Murali Murali in அறிக்கை

ஜூன் மாதம் 3ஆம் திகதி அரச மொழித் தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அன்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அரச மொழி வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரச மொழித் தினம் மற்றும் அரச மொழி வாரத்தை பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , ஜூன் மாதம் 3ம் திகதி அரச மொழித் தினமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன், ஒரு வாரத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளின் முழு ஒத்துழைப்புடன் அரச மொழிக் கொள்கையை செயற்படுத்தும் நோக்கத்துடன் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.