தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு! நாளை முதல்...

Report Print Sujitha Sri in அறிக்கை

புகையிரதங்களில் பொதிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகமான தடையானது நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளைய தினம் முதல் புகையிரதங்களில் பயணம் செய்பவர்கள் பொதிகளை கொண்டு செல்ல முடியும். இந்த விடயத்தை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், பொதிகள் பொறுப்பேற்கப்படும் புகையிரத நிலையங்களில் பலத்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களையடுத்து பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மேற்படி தற்காலிக தடை கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers