இலங்கையில் இன்றைய தினம் அறிமுகமாகிறது புதிய செயலி

Report Print Sujitha Sri in அறிக்கை

மின் பாவனையாளர்களுக்காக இலங்கையில் இன்றைய தினம் புதிய கையடக்க தொலைபேசி செயலியொன்று (Mobile App) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

CEB Care எனும் பெயரில் அறிமுப்படுத்தப்படவுள்ள இந்த கையடக்க தொலைபேசி செயலி மூலம் முறைப்பாடுகளை முன்வைத்தல், மின்கட்டணம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதனூடாக மக்கள் இலகுவாக சிறந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.