சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம்! வழங்கப்பட்டுள்ள காலக்கெடு

Report Print Ajith Ajith in அறிக்கை

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் இலங்கை வங்கியிடம் கணக்கறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி நாளை மறுநாள் 20ஆம் திகதி இந்த வங்கிக் கணக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று ஆணைக்குழு நேற்று இலங்கை வங்கியின் கொழும்பு - கொள்ளுப்பிட்டி கிளைக்கு உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த நிர்மாணம் தொடர்பில் வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பில் தகவல் தருமாறு ஆணைக்குழு, இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த வெளிநாட்டு நிதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரி தினியாவெல பாலித தேரர் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.