க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச செய‌லகத்திற்கு எதிராக ப‌ள்ளியில் கூட்ட‌ம் ந‌ட‌த்தப்பட்டதா? எம்.பியின் கருத்திற்கு எதிர்ப்பு

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

க‌ல்முனையில் தேசிய‌ தௌஹீத் ஜ‌மாத்தின‌ர், க‌ல்முனை த‌மிழ் பிர‌தேச‌ செய‌ல‌க‌த்திற்கு எதிராக ப‌ள்ளியில் கூட்ட‌ம் ந‌ட‌த்திய‌தாக‌ கோடீஸ்வ‌ர‌ன் எம்.பி நாடாளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார் என உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

அக்க‌ட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும்,

தேசிய‌ தௌஹீத் ஜ‌மாத்தின‌ருக்கு க‌ல்முனையில் ப‌கிர‌ங்க‌மாக‌ இய‌ங்கும் கிளை இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.

அப்ப‌டி க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச செய‌லகத்திற்கு எதிராக ப‌ள்ளியில் கூட்ட‌ம் ந‌ட‌த்தியிருந்தால் நிச்ச‌ய‌ம் ஊட‌க‌ங்க‌ளில் செய்தி வ‌ந்திருக்கும்.

ஆனால் இப்ப‌டியொரு செய்தியை ஊட‌க‌ங்க‌ளில் முஸ்லிம்க‌ள் நாமே காணாத‌ போது கோடீஸ்வ‌ர‌ன் இந்த கட்டுக்கதைகளை சொல்லி த‌மிழ் முஸ்லிம் உற‌வை சிதைக்க‌ முற்ப‌டுகிறார்.

அத்துட‌ன் இஸ்லாமிய சாம்ராஜ்ய‌த்தை உருவாக்க‌ முனைவோரே இத்த‌டைக்கு பின்னால் உள்ள‌தாகவும் கற்பனை கதைகளை சொல்லியுள்ளார்.

இல‌ங்கை முஸ்லிம்க‌ள் குறிப்பாக‌ க‌ல்முனை முஸ்லிம்க‌ள் இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌ தீவிர‌வாத‌த்துக்கு எதிரான‌ ம‌க்களாவர்.

இத‌ன் கார‌ண‌மாக‌வே க‌ல்முனை, சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் இஸ்லாமிய‌ சாம்ராஜ்ய‌ (ஐ.எஸ்) தீவிர‌வாதிக‌ளை காட்டிக்கொடுத்த‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஒரு சில‌ தீவிர‌வாதிக‌ள் அனைவ‌ரும் ஒன்றில் கொல்ல‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌ர் அல்ல‌து கைது செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ர் என்ப‌தை பாதுகாப்பு த‌ர‌ப்பு அறிவித்த‌மை கோடீஸ்வ‌ர‌னுக்கு தெரியாதா?

இப்ப‌டி இருக்க‌ ஐ.எஸ் தீவிர‌வாதிக‌ள் க‌ல்முனையின் எந்த‌ ப‌ள்ளியில் வைத்து க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌த்திற்கு எதிராக கூட்ட‌ம் நட‌த்தினார்க‌ள் என்ப‌தை ச‌ரியான ஆதார‌த்துட‌ன் அவ‌ர் நிரூபிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக் கொள்கிற‌து.

ஒரு நாடாளுமன்ற‌ உறுப்பின‌ருக்கு நாடாளும‌ன்றில் சிற‌ப்புரிமைக‌ள் உள்ள‌ன‌ என்ப‌த‌ற்காக‌ பொய்யையும் புர‌ட்டுக்க‌ளையும் பேசி ச‌மூக‌ங்க‌ளுக்கிடையில் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்த‌ வேண்டாம் என‌ கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers