இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்தி கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ள ரஷ்யா

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்தி கொள்ள ரஷ்யா விருப்பம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கும், பிராந்திய பாதுகாப்பு சவால்களுக்கும் முகங்கொடுக்கும் வகையிலும் இந்த ஒத்துழைப்புக்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.

மொஸ்கோவுக்கு சென்ற இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ரவீந்திர விஜேகுணவர்த்தனவிடம், ரஸ்யாவின் பிரதம இராணுவ அதிகாரி வெலரி ஜெரஸிமோவ் இதனை தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவில் ரஸ்யா நம்பத்தகுந்த பங்காளர் என்று இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 60 வருடங்களாக ரஷ்யா இலங்கையுடன் சிறந்த உறவை பேணி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா மற்றும் இலங்கையின் ஜனாதிபதிகள் அண்மையில் இணங்கி கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரஷ்ய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Latest Offers