இலங்கை மீது அமெரிக்கா படையெடுக்க முடியும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

அமெரிக்காவுடன் இலங்கை ஏற்படுத்தி கொள்ளும் இரு உடன்படிக்கைகளும் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என இலங்கையின் ராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின் போது கருத்துரைத்த அவர், ACSA என்ற கையகப்படுத்தல் மற்றும் சேவை உடன்படிக்கை மற்றும் சோபா (SOFA) என்ற படைகள் உடன்படிக்கை என்பன இலங்கை, அமெரிக்காவுக்கு கீழ் படியும் நிலையை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளார்.

எனினும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இந்த உடன்படிக்கைகள் தொடர்பில் அதிக அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த உடன்படிக்கையின் மூலம் அமெரிக்கா இலங்கை மீது படையெடுக்கவும் முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ACSA என்ற கையகப்படுத்தல் மற்றும் சேவை உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட போது ஏன் அதற்கு எதிராக குரல் எழுப்பப்படவில்லை என்று இந்த நிகழ்வின் போது ஊடகவியலாளர் ஒருவர் கோஹனவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் வழங்கிய கோஹன, அந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன் யாருக்கும் தெரியாமல் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.