லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த மேல் நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அறிக்கை

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை சம்பந்தமான வழக்கை மேல் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முத்தையா சகாதேவன் என்பவர் கடந்த 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாகவே வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

62 வயதான சகாதேவனுக்கு ஏற்பட்ட சிறுநீர் கோளாறு காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி கொழும்பு 7 பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது, விடுதலைப் புலிகளின் சினைப்பர் துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அத்துடன் கதிர்காமர் கொலை வழக்கில் 45 சாட்சியாளர்கள் சாட்சியமளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.