கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

Report Print Sujitha Sri in அறிக்கை

கொழும்பில் காணி வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் பின்வரும் இடங்களில் காணி விலை மதிப்பீடு உயர்வடைந்துள்ள சதவீதம்,

  • தலாஹேன பிரதேசத்தில் - நூற்றுக்கு 64 சதவீதம்,
  • கொதடுவ மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளில் - நூற்றுக்கு 35 - 55 சதவீதம்,
  • அத்துருகிரிய, புறக்கோட்டை, மஹரகம, கொட்டாவ மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களில் - நூற்றுக்கு 25 - 32 சதவீதம் என்றவாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தெஹிவளை, நாவல ஆகிய பிரதேசங்களிலும் விலை மதிப்பீடு அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Latest Offers