கீத்நொயரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லலித் ராஜபக்சவுக்கு தொடர்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

ஊடகவியலாளர் கீத்நொயரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரி லலித் ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ரிவிர செய்தித்தாளின் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும் பின்னர் இந்த கீத்நொயரின் தாக்குதலில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இது தொடர்பாக குற்றப்புலனாய்வு துறைக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக சாட்சியங்களை பதிவு செய்யுமாறும், அதேவேளை இந்த கீத்நொயரின் வழக்கு தொடர்பில் இவரை சந்தேகநபராக குறிப்பிடுமாறும் சட்டமா அதிபர் கேட்டுள்ளார்.

Latest Offers