கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆயுத முனையில் உருவாக்கப்பட்டதென்பது சோடிக்கப்பட்ட ஒரு பொய்

Report Print Rusath in அறிக்கை

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆயுத முனையில் உருவாக்கப்பட்டதாகும் என்பது முழுக்க முழுக்கச் சோடிக்கப்பட்ட ஒரு பொய் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் படியான தமிழர்களின் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு அறிக்கையிடும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், பிரமுகர்களும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டதாகும் என்கின்றனர். இது முழுக்க முழுக்கச் சோடிக்கப்பட்ட ஒரு பொய் ஆகும்.

1988ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், பதில் செயலாளருமான காலஞ்சென்ற ரஞ்சன் விஜயரட்ண அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

12.04.1989 அன்று உருவான கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் தான் கடந்த முப்பது வருடங்களாக இதுவரை தரமுயர்த்தப்படாமல் பெயரளவில் இயங்கி வருகிறது.

உண்மைச் சம்பவங்கள் இவ்வாறிருக்க முஸ்லிம் தரப்பினரில் சிலர் இவ் உப பிரதேச செயலகம் முப்பது வருடங்களுக்கு முன் ஆயுத முனையில் உருவாக்கப்பட்டதென்று கூறுவதும், பிரதேச செயலகமொன்றினை உருவாக்கும் விடயம் மாகாண சபைகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பதைத் தெரிந்து கொண்டும், முஸ்லிம் தரப்பின் சட்ட முதுமானி ஒருவர் உபபிரதேச செயலக உருவாக்கத்துடன், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் பெயரை இவ்விடயத்திற்குள் இழுப்பதும், இந்திய அமைதி காக்கும் படையை இவ்விடயத்தோடு சம்பந்தப்படுத்துவதும் பொய்யும் தீய நோக்கங்கள் கொண்டதுமாகும்.

முஸ்லிம் தரப்பினர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைப்பது தவறல்ல. ஆனால் பொய்யான கூற்றுக்களையும் ஆதாரமற்ற தகவல்களையும் முன்வைப்பதையும், கல்முனை குறித்த உண்மை வரலாறுகளை மூடி மறைப்பதையும் தவிர்த்துக் கொள்வதே ஏற்புடையதாகும். என அவர் இதன் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers