இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்

Report Print Steephen Steephen in அறிக்கை

இலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 20 ஆண்டு நிறைவு நிகழ்வில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மெப் என்பது கூகுள் வழங்கும் இணையத்தள வரைப்பட சேவையாகும். அந்த வரைப்பட சேவையின் மூலம் தற்போது இலங்கைக்கு Google transit வழங்கப்பட்டுள்ளது.

Google transit தனியார் போக்குவரத்து தகவல்கள், தனியார் போக்குவரத்துக்கான இடங்கள் மற்றும் வரைப்பட தகவல்களை வழங்கும்.

எனினும் கூகுள் மெப், பொது போக்குவரத்து சேவைகளுக்கான தகவல்களை வழங்கும் Google transit இலங்கைக்கு வழங்கப்படவில்லை.

Google transit சேவையை இலங்கையில் பயன்படுத்துவதை ஆரம்பிக்க தேவையான விபரங்கள் கூகுள் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.

Latest Offers