தென்னிலங்கையில் பாரிய தீ விபத்து - உயிருக்கு போராடும் ஊழியர்கள் - காப்பாற்ற தீவிர போராட்டம்

Report Print Vethu Vethu in அறிக்கை
1788Shares

களுத்துறை, ஹொரணை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சாலைக்குள் பெருமளவு ஊழியர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எரியும் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.