காமினி செனரத் விடுதலை

Report Print Steephen Steephen in அறிக்கை

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாய் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தொடர்ந்த வழக்கில், ஜனாதிபதி செயலக முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சுமத்திய தரப்பினர், சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியுள்ளதாக விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேரத்ன (தலைவர்), சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில், ஜனாதிபதி செயலக முன்னாள் தலைமை அதிகாரியும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான காமினி சேதர செனரத், பியதாச குடாபாலகே, கொக்காவிட லியனகே லசந்த பண்டார ஆகியோரை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.