மரண தண்டனைக்கு எதிரான மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அறிக்கை

மரண தண்டனையை ஒழிக்க தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனையாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல வரைவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று விசேட மனுக்களை விசாரணைக்கு எடுக்காது உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்த மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அடிப்படைவாதங்களை முன்வைத்த சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனை கவனத்தில் எடுத்து கொண்டே உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரணைக்கு எடுக்காது நிராகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட, மரண தண்டனை ஒழிப்பதற்காக தனிப்பட்ட யோசனையாக நாடாளுமன்றத்தில் சட்டமூல வரைவு ஒன்றை முன்வைத்தார்.

கடந்த மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனையாக முன்வைக்கப்பட்ட இந்த சட்டமூல யோசனை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது அல்ல எனவும், அந்த யோசனையை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றுவது போதுமானது என கூறியே உயர் நீதிமன்றத்தில் இந்த மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.