நோர்வே நடராஜா சேதுரூபனை சிக்கலில் மாட்டிவிட திட்டம்! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

Report Print Dias Dias in அறிக்கை

தனது பெயரில் நடைபெற்ற தவறான செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள நீதித்துறையினருடனும் பல்வேறு தரப்பினரிடமும் பகிரங்க மனவருத்தத்தை தெரிவித்து கொள்வதாக ஊடகவியலாளர் நடராஜா சேதுரூபன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

நடராஜா சேதுரூபன் ஆகிய நான் கடந்த 17ஆம் திகதி எனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்காகத் தனிப்பட்ட குடும்பத் தேவைக்காக இலங்கை வந்ததிருந்தேன்.

நான் கடந்த தேர்தலில் தமிழ் ஆயுத தேச விரோத குழுக்களுக்கு எதிராகவும், தேசிய அரசியல் கட்சிக்கு ஆதரவாக யாழ். குடாநாட்டில் ஊடகவியலாளராக செயற்பட்டு இருந்தேன்.

அதன் பின்னர் நான் இலங்கையில் இல்லாத காலபகுதியில் அரசியல்வாதி ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னைக் கைது செய்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்றில் பிடிவிறாந்து எடுத்து வைத்திருந்தனர்.

நான் இன்றுவரை யாரிடமும் கப்பம் கேட்கவும் இல்லை ஆரும் எனக்கு கப்பம் இலங்கையில் தரவும் இல்லை. யுத்தத்தில் பாதிக்கபட்ட சிறுவருக்கு பேனை, பென்சில், கொப்பி கொடுத்தமையை கப்பமாக ஊடகங்கள் விமர்சிப்பது வேதனையை தருகிறது.

03.08.2019ஆம் திகதி சுமார் ஒரு கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எனது மகளின் பூப்புனித நீராட்டு விழா நடைபெறுவதற்கு சற்று முன்னதாக என்னை நெல்லியடி பொலிஸ் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பெற்று வைத்திருந்த பிடிவிறாந்தின் அடிப்படையில் என்னை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தடுப்பு காவலில் வைத்திருந்து 06.08.2019ஆம் திகதி பிணையில் விடுதலையானேன்.

நான் இலங்கையில் வாழாத காலத்தில் நெல்லியடியில் இருந்து இயக்கப்படும் பிரித்தானியக் கடவுச்சீட்டு உடைய ஆரியகுணறாஸா செல்வா என்பவருடைய இணையத்தளத்தில் யாழ். மாட்டத்தில் கடமையாற்றிய ஒரு நீதவான் தொடர்பாக ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பாக குறித்த நீதவான் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நடராஜா சேதுரூபனாகிய நான் நோர்வேவில் இருந்து இலங்கை வந்த பின் சில சட்டத்தரணிகள் (07.08.2019) நானே குறித்த இணையத்தை நடத்துவதாகவும் குறித்த இணையத்தில் வெளியான செய்திக்கு நானே பொறுப்பு என்றும் போலியாக நீதிமன்றில் ஆள் மாறாட்டம் செய்து எனது பெயருக்கு ஒரு கைது உத்தரவும், நான் வெளிநாடு செல்ல தடையும் நீதிமன்றின் ஊடாக பெற்றுள்ளதாக நான் ஊடகங்கள் ஊடாக அறிந்துகொண்டேன்.

இந்தக செயல் ஊடாக நீதிமன்றத்தையும், நீதி துறையினையும் ஒரு சிலர் தவறாக தமது அரசியல் தேவைக்கு பயன்படுத்த முற்பட்டுள்ளமை புலனாகின்றது.

இலங்கை ஈ.பி.டி.பி தேசவிரோத கும்பல்களும், தமிழ் ஆயுத குழுக்களும் எனது பெயரில் பல நூறு மோசடிகளை நான் இலங்கையில் இல்லாத காலத்தில் இலங்கைக்குள் அரங்கேற்றி வருகின்றனர்.

அதன் ஊடாக எனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தவும் நான் செய்யாத குற்றத்திற்கு என்னைத் தண்டிப்பதுமே அவர்களுடைய இரகசிய திட்டமாகும்.

எனது பெயரில் நடைபெற்ற குற்றச் செயல்கள்,

எனது பெயரில் போலி பேஸ்புக்கை உருவாக்கி இறந்துபோன பெண்களின் பெயரில் போலி பேஸ்புக்கை உருவாக்கி பாலியல் விடயங்களைக் கதைத்துவிட்டு கப்பம் பெறுவது போன்றும் கொடுப்பது போன்றும் கதைத்துவிட்டு நோர்வேவில் இருக்கும் நடராஜா சேதுரூபன் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுவதாகச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

எனது பெயரில் இலங்கை தொலைபேசி இலக்கத்தில் வைபர் இணைப்புகளை உருவாக்கி எனது படத்தைப் போட்டு கப்பம் கேட்டு ஆக்களை மிரட்டுவது அதன் ஊடாக நோர்வே நடராஜா சேதுரூபனை சட்டச் சிக்கலில் ஒரு சதியில் மாட்டிவிடுவது.

இணையங்கள் சமூக வலைத்தளங்களில் இலங்கையில் உள்ள தனிநபர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்பிவிட்டு அவற்றை நோர்வேவில் இருக்கும் நடராஜா சேதுரூபனை செய்வதாக போலி வதந்திகளைப் பரப்பி வருகின்றன.

எனது பெயரை ஒத்த பெயரில் மின் அஞ்சல் முகவரிகளை உருவாக்கிக் குற்றச் செயல்களைச் செய்து வருகின்றனர்.

எனது பெயரில் பல்வேறு குற்றச்செயல்களை சாகவச்சேரியில் உள்ள ஒருவரும், நெல்லியடியில் உள்ள ஒருவரும் அவர்களின் சுவிஸ் முகவர் ஒருவரும் அவர்களின் பின்னால் இருந்து செயற்படும் மலேசிய, கனடா நபரும் முக்கியமானவர்கள்.

இவர்கள் தொடர்பாக பல நூறு தடவைகள் இலங்கை சட்டத்துறைக்கு முறையிட்டும் இன்றுவரை எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமை அவர்கள் குற்றத்திற்கு உடந்தையாக உள்ளார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

என்னால் பாதிக்கப்பட்டதாக எவராவது கருதினால் அவர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன்.

எனது பெயரில் நடைபெற்ற குற்றச்செயல்களில் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தயவு செய்து என்னிடம் நேரடியாக எனது கை தொலைப்பேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு கோருவதுடன் பகிரங்கமாக மனவேதனையும் அடைகிறேன்.

நோர்வேயில் நான் வாழும் காலத்தில் எனது கை தொலைப்பேசிக்கு உள்வரும் வெளி செல்லும் அழைப்புகள் உட்பட அனைத்து டிஜிற்றல் தொடர்பாடல்களும் 6 வருடத்திற்கு ஒளி ஒலிப்பதிவு செய்யப்பட்டு பதிவு செய்து வைக்கப்படுவதால் இலகுவில் இத்தகைய குற்றச்செயல்கள் நோர்வேயில் நடைபெறுவது இல்லை.

எனது பெயரில் நடைபெற்ற தவறான செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள நீதித்துறையினருடனும் பல்வேறு தரப்பினரிடமும் பகிரங்க மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

நான் சட்டத்துறையில் கல்வி கற்றுள்ளதுடன் நோர்வே நாட்டில் கடந்த 18 வருடமாக நோர்வே நியூஸ் ஊடகவியலாளராக கடமையாற்றி வருவதுடன் அமெரிக்க வெளியுறவு செயலகத்தின் நேரடி தொலைபேசி ஊடாக விசேட ஊடக மாநாடுகளில் கலந்து கொள்ளும் ஒரே ஒரு தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன்.

நான் ஒருபோதும் சட்டத்திற்கு எதிரான செயலை செய்ய விரும்பியவன் இல்லை. நான் ஒரு போதும் சட்டத்திற்கு முராணான எந்த விதமான செயல்களிலும் உடந்தையாக இருந்தவனும் இல்லை.

உலகத்தில் உள்ள 103 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதுடன் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளராக இருக்கும் எனக்கு எதிரான தீவிர அவதூறு செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

பல்வேறு மறைகரங்களும், அரசியல் காரணங்களும் இவற்கு பின்னால் மறைந்துள்ளன.

தனிமனித உணர்வுகளால் மனம் நொந்த நிலையில் இருந்த எனது குடும்ப உறவினருக்கு எதிராக அவதுறு பிரச்சாரம் ஊடகங்களில் பரப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய சட்டபடி, ஐரோப்பிய பிரஜா உரிமை உள்ளவர்களின் முகங்கள் ஊடகங்களில் வெளியிடும்போது அவர்களின் தனிமனித சட்ட உரிமைகள் இலங்கை ஊடகங்களில் மீறப்பட்டுள்ளன.

என்னை அன்பாகவும் பண்பாகவும் நீதிமன்றத்திற்கு கூட்டி வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கபடுத்துவது சட்டத்திற்கு முரணானது என்பதனை ஊடகத்துறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும். இதனால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் உயர் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

பொலிஸாரின் சேவைக்கும் இத்தகய ஊடாக செயற்பாடு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

என்னைக் கைது செய்த பொலிஸ்யும் என்னை பாரம் எடுத்த பயங்கரவாத தடுப்பு பொலிஸாரும் என்னைச் சிறையில் அடைத்த பின் யாழ். சிறையிலும் நான் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், மதிப்பாகவும் நடத்தபட்டமையை இட்டு நான் மிகவும் மனம் நெகிழ்ச்சி அடைவதுடன் இலங்கை பயங்கரவாத தடுப்பு பொலிஸ்க்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.