பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு சேவை நீடிப்பு

Report Print Kamel Kamel in அறிக்கை
43Shares

பாதுகாப்பு படைகளின் பிரதானியான அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ரவீந்திர விஜேகுணவர்தன கடற்படைத் தளபதியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.