கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாற்றம்

Report Print Vethu Vethu in அறிக்கை

புதிய இயந்திர முறையில் கடவுச்சீட்டு வழங்கும் முறை அமுல்படுத்தவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் கண்களை ஸ்கேன் செய்யும் புதிய நடைமுறை அமுலாகவுள்ளது.

புதிய நடைமுறை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமுலாகும் என, திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தேவையான இயந்திரங்கள் உரிய நேரத்தில் பெறப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவாக இனம் காணும் வகையில் இந்த நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது. இதற்காக விசேட இயந்திரங்கள் தருவிக்கப்படவுள்ளன.

பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers