மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு! சந்தேகநபர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

Report Print Ajith Ajith in அறிக்கை

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கில் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீது சட்டமா அதிபர் 7,573 குற்றச்சாட்டுகளை இன்று தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு முன் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிக் கட்டளை சட்டம், வெடிபொருள் கட்டளை சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தை மீறியதற்காக என மொத்தம் 13 சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பு செயலாளர் சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன கூறியுள்ளார்.

மேலும் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை சட்டவிரோதமாக வைத்திருத்தல், கொண்டு செல்லுதல் தொடர்பாகவும், இந்த வழக்கு தொடர்பாக தவறான ஆதாரங்களை வழங்கியமை தொடர்பாகவும் சந்தேகநபர்கள் மீது மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.