உல‌மா க‌ட்சியின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

சார‌திக‌ள் அனும‌தி ப‌த்திர‌ம் பெறுவ‌த‌ற்கான‌ ம‌ருத்துவ‌ சான்றித‌ழை வழங்கும் மேல‌திக‌ நிலையமொன்றை அம்பாறை மாவ‌ட்ட‌ த‌மிழ் பேசும் ப‌குதிக‌ளான‌ க‌ல்முனை, ச‌ம்மாந்துறை, பொத்துவில் தொகுதிக‌ளின் ஏதாவ‌தொரு பகுதியில் நிறுவ‌ அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கோரப்பட்டுள்ளது.

உல‌மா க‌ட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், அம்பாறை மாவ‌ட்ட‌த்தின் க‌ரையோர‌ பிர‌தேச‌ங்க‌ளில் சுமார் மூன்று இல‌ட்ச‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் உள்ள‌ன‌ர்.

அப்ப‌டியிருந்தும் சார‌தி அனும‌திப்ப‌த்திர‌ ம‌ருத்துவ‌ சான்றித‌ழுக்கான‌ நிலைய‌ம் அம்பாறை சிங்க‌ள‌ ப‌குதியில் ம‌ட்டும் இருப்ப‌து ப‌ல‌ருக்கு பாரிய‌ அசௌக‌ரிய‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

ச‌ன‌ நெருக்க‌டி கார‌ண‌மாக‌ ப‌ல‌ரும் ப‌ல‌ நாட்க‌ள் அலைய‌ வேண்டியுள்ள‌து. இத‌னை த‌விர்த்து க‌ரையோர‌ப் ப‌குதிக‌ளில் ஒரு வைத்திய‌ நிலைய‌த்தை திற‌க்க‌ முடியாத‌ அள‌வு அர‌சுக்கு முட்டுக் கொடுக்கும் த‌மிழ், முஸ்லிம் க‌ட்சிக‌ளின் நிலை உள்ள‌து.

இத்த‌னைக்கும் முஸ்லிம் காங்கிர‌ஸின் சுகாதார‌ பிர‌தி அமைச்ச‌ரும் அம்பாறை மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ உள்ளார்.

ஆக‌வே அர‌சு உட‌ன‌டியாக‌ இதில் த‌லையிட்டு அம்பாறை மாவ‌ட்ட‌ த‌மிழ் பேசும் ப‌குதியில் மேலுமொரு சார‌தி அனும‌திப்ப‌த்திர‌ ம‌ருத்துவ‌ சான்றித‌ழுக்கான‌ நிலைய‌த்தை உட‌ன‌டியாக‌ திற‌க்க‌ வேண்டும் என‌ கோரப்பட்டுள்ளது.

Latest Offers